இந்தியாவில் ஒரு மாவட்ட மருத்துவமனையில் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 24 படுக்கைகள் உள்ளன.
நிதி ஆயோக் வெளியிட்ட மாவட்ட மருத்துவமனைகளின் மதிப்பீட்டு அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
பீகாரிலுள்ள மருத்துவமனைகளில் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 6 படுக்கைகள் என்ற குறைவான அளவிலேயே உள்ளன.
புதுச்சேரியின் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையுடன், 1 லட்சம் பேருக்கு 222 படுக்கைகள் உள்ளன.
2012 ஆம் ஆண்டு இந்தியப் பொதுச் சுகாதார தரநிலைகளின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மருத்துவமனைகளில் சராசரியாக 1 லட்சம் பேருக்குக் குறைந்தபட்சமாக 22 படுக்கைகள் இருக்க வேண்டும்.