கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான மாவட்டங்களுக்கான செயல் திறன் தரவரிசைக் குறியீட்டை வெளியிட்டது.
2019-20 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ராஜஸ்தானின் சுமார் 3 மாவட்டங்கள் பள்ளிக் கல்வியின் செயல்திறனில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பினைப் பெற்றுள்ளன.
இந்த மாவட்டங்கள் ‘உத்கர்ஷ்’ என்ற தரத்தினை (இரண்டாம் உயரிய தரம்) பெற்று உள்ளன.
இது விரிவானப் பகுப்பாய்விற்கான ஒரு குறியீட்டை உருவாக்குவதன் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வி முறையின் செயல்திறனை மதிப்பிடுகிறது.
இது 83 குறிகாட்டிகளில் 600 புள்ளிகளின் மொத்த மதிப்பீட்டினைக் கொண்டுள்ளது.
இந்த 83 குறிகாட்டிகள் 6 பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு முடிவுகள்
செயல்திறன்மிக்க வகுப்பறைப் பரிமாற்றங்கள்
உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான உரிமை வழங்கீடுகள்