மாஸ்கோவிற்கு தூதரகப் பணிக்காகச் செல்லும் முதலாவது பெண் விங் கமாண்டர்
September 17 , 2019 2120 days 706 0
போர் விமானங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வானியல் பொறியியலாளர் மற்றும் விங் கமாண்டரான அஞ்சலி சிங் என்பவர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை விமான இணைப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள ஒரு இந்தியத் திட்டத்தில் பாதுகாப்புப் பணியாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரி இவராவார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பணிகளில் “ஏதேனும்” ஒரு இராணுவத் தூதராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் இந்திய ஆயுதப் படை அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு இணைப்பாளர்கள் அல்லது ஆலோசகர்களை இந்தியா கொண்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற சில நாடுகளில் மட்டுமே ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய மூன்று இந்தியப் படைகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
இதுபற்றி
ஒரு இராணுவ இணைப்பாளர் என்பவர் பெரும்பாலும் தூதரகத்தில் இராஜதந்திரப் பணிக்காக இணைக்கப்பட்ட ஒரு இராணுவ நிபுணர் ஆவார்.
அவர்கள் இராஜதந்திர நிலையையும் சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள்.