மிக உயரமான இடத்தில் அமைந்த உலகின் முதல் போர் விமான தளம்
September 16 , 2023 594 days 356 0
எல்லைச் சாலைகள் அமைப்பு ஆனது, லடாக்கில் உள்ள நியோமா என்ற கிராமத்தில் மிக உயரமான இடத்தில் அமைந்த இந்தியாவின் முதல் போர் விமான தளத்தினை அமைக்க உள்ளது.
நியோமா கிராமம் ஆனது சுமார் 13,700 அடி உயரத்தில் பாங்கோங் சோ நதியின் தெற்குக் கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
நியோமா சீனாவுடனான மெய் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நியோமா விமான நிலையப் பணிகள் மட்டுமல்லாது, ஷிங்குன் லா சுரங்கப் பாதையின் கட்டுமானப் பணிகளையும் எல்லைச் சாலைகள் அமைப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இது 15,855 அடி உயரத்தில் அமைந்த உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சுரங்கப் பாதையாக இருக்கும்.
இந்தச் சுரங்கப் பாதையானது இமாச்சலில் உள்ள லாஹவுல்-ஸ்பிதி பகுதியை லடாக்கின் ஜாஸ்கர் பள்ளத்தாக்குப் பகுதியுடன் இணைக்கச் செய்வதோடு அனைத்து வானிலைகளிலும் போக்குவரத்து சேவையினை வழங்கும் வகையில் இது அமைக்கப் படும்.