TNPSC Thervupettagam

மிக நீண்ட கால பதவி வகித்த கர்நாடக முதல்வர்

January 11 , 2026 9 days 129 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் தேதி D. தேவராஜ் உர்ஸின் பதவிக் கால சாதனையை முறியடித்து, சித்தராமையா கர்நாடகாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • அவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய AHINDA தலைவர் ஆவார்.
  • D. தேவராஜ் உர்ஸ் இரண்டு முறை ஏழு ஆண்டுகள் மற்றும் 239 நாட்கள் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • சித்தராமையா முன்னதாக 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக முழு பதவிக் காலம் பணியாற்றினார் என்பதோடு மேலும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மீண்டும் பதவி வகித்து வருகிறார்.
  • பாக்யா திட்டங்கள் என்றும் பின்னர் ஐந்து உத்தரவாதங்கள் என்றும் கூறப்பட்ட  அவரது நலத்திட்ட முயற்சிகள் ஏழைகளுக்கு மிக ஆதரவான ஒரு பெரிய கொள்கை அமலாக்கமாகக் கருதப்படுகின்றன.
  • நிலச் சீர்திருத்தங்கள், இட ஒதுக்கீடு மற்றும் அதிகாரப் பரவலாக்கலுக்குப் பிறகு கர்நாடகாவில் நான்காவது மறைமுக சமூக-அரசியல் புரட்சியாக உத்தரவாதத் திட்டங்கள் கருதப்படுகின்றன.
  • நிதித்துறையிலும் பணியாற்றுகின்ற சித்தராமையா பதினாறு மாநில நிதி ஒதுக்கீட்டு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.
  • 2025–26 ஆம் ஆண்டு கர்நாடக நிதி ஒதுக்கீடு முதல் முறையாக நான்கு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்