TNPSC Thervupettagam

மிக நீண்ட காலம் பதவி வகித்த 2வது பிரதமர்

July 29 , 2025 10 hrs 0 min 29 0
  • பிரதமர் நரேந்திர மோடி 2025 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று தொடர்ச்சியாக 4,078 நாட்கள் பதவியில் இருந்தார்.
  • 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை அவர் முறியடித்தார்.
  • ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலப் பிரதமராகப் பணியாற்றிய இரண்டாவது நபர் மோடி ஆவார்.
  • ஜவஹர்லால் நேரு அவர்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வரை தடையின்றி பிரதமராகப் பணியாற்றினார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமர் நரேந்திர மோடி ஆவார் (ஆகஸ்ட் 15, 1947).
  • இந்திய தேசிய காங்கிரஸ் (INC) சாராத பிரதமர்களில் மிகவும் நீண்ட காலம் பதவி வகித்தவர் இவர் தான்.
  • அதிக காலம் பதவி வகித்த இந்தி மொழி பேசாத மாநிலத்தினைச் சேர்ந்த பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
  • இரண்டு முழு பதவிக் காலங்களை நிறைவு செய்து, மக்களவையில் முழுப்  பெரும்பான்மையுடன் இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒரே தலைவர் மோடி ஆவார்.
  • ஜவஹர்லால் நேருவைத் தவிர, ஓர் அரசியல் கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே பிரதமர் மோடி ஆவார்.
  • அனைத்துப் பிரதமர்கள் மற்றும் முதலமைச்சர்களுள், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்கள் எனத் தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் கட்சித் தலைவராக வெற்றி பெற்ற ஒரே இந்தியத் தலைவர் இவரே ஆவார்.
  • 2001 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை குஜராத்தின் முதலமைச்சராக பணி ஆற்றிய மோடி, பின்னர் 2014 ஆம் ஆண்டில் பாஜகவை தேசிய அளவிலான வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்