TNPSC Thervupettagam

மிக நெருக்கடியான நகரம்

November 15 , 2018 2455 days 782 0
  • அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான தேசியப் பொருளாதார ஆய்வு அமைப்பினால் (National bureau of economic research - NBER) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி புனே நகரம் இந்தியாவின் 7-வது நெருக்கடியான நகரமாகும்.
  • இந்த ஆய்வு நகர்ப்புற இந்தியாவின் தற்போதைய போக்குவரத்து நிலையை கூகுள் வரைபடத்தை பயன்படுத்தித் தயாரித்துள்ளது.
  • இந்த ஆய்வின்படி பெங்களூருவானது மிக நெருக்கடியான முதல் நகரமாகவும் அதனைத் தொடர்ந்து மும்பை 2-வது இடத்திலும் உள்ளன.
  • டெல்லி 3-வது இடத்தினையும் அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவையும் உள்ளன.
  • 20 நகரங்களைக் கொண்ட இந்த பட்டியலில் போபால் 20-வது இடத்தில் உள்ளது.
  • போக்குவரத்து வேகம் குறித்த மற்றொரு குறியீட்டில் கொல்கத்தா மிக மெதுவான நகரமாகவும் புனே 20-வது இடத்திலும் உள்ளன.
  • வேகமான நகரங்களை அளவிடும் மற்றொரு குறியீட்டில் 10 நகரங்களில் ராணிப் பேட்டை நகரம் முதலிடத்திலும் பானிபட் நகரம் பட்டியலின் இறுதியிடமான 10-வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்