TNPSC Thervupettagam

மிகக் குறைந்த பாலின விகிதம் - பீகார்

July 6 , 2025 15 hrs 0 min 7 0
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் 2022 ஆம் ஆண்டில் பிறப்பின் போது மிகக் குறைந்த பாலின விகிதத்தை பீகார் பதிவு செய்துள்ளது.
  • இது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 891 பெண் குழந்தைகளை மட்டுமே பதிவு செய்து ள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் பிறப்பின் போது பாலின விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் ஒரே மாநிலம் பீகார் மட்டுமே ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில், இந்த மாநிலத்தில் பிறப்பின் போதான பாலின விகிதம் 964 ஆக இருந்தது, இது 2021 ஆம் ஆண்டில் 908 ஆகக் குறைந்தது, மேலும் 2022 ஆம் ஆண்டில் 891 ஆகக் குறைந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் பிறப்பின் போது பாலின விகிதம் குறைவாக இருந்த இதர பிற மாநிலங்கள் மகாராஷ்டிரா (906), தெலுங்கானா (907) மற்றும் குஜராத் (908) ஆகியவை ஆகும்.
  • மறுபுறம், நாகாலாந்தில் அதிகபட்சமாக 1,068 பெண் குழந்தைகள் பிறந்தனர், அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (1,036), லடாக் (1,027), மேகாலயா (972), மற்றும் கேரளா (971) ஆகியவை உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்ட மொத்தப் பிறப்புகளில், சுமார் 52.4% ஆண் குழந்தைகளும், 47.6% பெண் குழந்தைகளும் ஆவர்.
  • பிறப்புகளில் சுமார் 43% கிராமப் புறங்களில் பதிவு செய்யப்பட்டாலும், 56.5% நகர்ப் புறங்களில் தான் பதிவு செய்யப்பட்டன.
  • தமிழ்நாடு, கேரளா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய சில மாநிலங்களில், பெருமளவு ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில் பொதுவான சரிவு காணப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த இறப்புகளில், ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதம் முறையே 60.4% மற்றும் 39.6% ஆகும்.
  • பதிவு செய்யப் பட்ட இறப்புகளில் 59.5% கிராமப்புற இந்தியாவில் நிகழ்ந்ததாகவும், 40.5% நகர்ப்புறங்களில் நிகழ்ந்ததாகவும் இந்த அறிக்கை காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்