TNPSC Thervupettagam

மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் – ரஷ்யா மற்றும் சீனா

May 23 , 2021 1549 days 709 0
  • ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தங்களது மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையத்தின் அடிக்கல் நாட்டும் விழாவினை நடத்தி உள்ளன.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மாஸ்கோவானது (ரஷ்ய நாடு) சீனாவின் இரு நகரங்களில் உயர் செயல்திறனுடைய நான்கு அணுசக்தி நிலையங்களை அமைக்க உள்ளது.
  • 7வது மற்றும் 8வது அலகுகள்  கட்டப்பட உள்ள தியான்வென் அணுசக்தி மின் நிலையம் சீனாவின் ஜியான்ங்சூ (Jiangsu) மாகாணத்திலுள்ள லியான்யுன்காங் (Lianyungang) நகரில் அமைந்துள்ளது.
  • ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றால் இணைந்து கட்டமைக்கப்படும் சூடப்பு என்ற அணுசக்தி மின் நிலையத்தின் 3வது மற்றும் 4வது அலகுகள் லியாதிங் மாகாணத்தின் சிங்சேங் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
  • வெவ்வேறு பிரச்சினைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடமிருந்து பல இன்னல்களைச் சந்தித்து வரும் ரஷ்யாவும் சீனாவும் இந்த அணுசக்தித் திட்டத்தின் மூலம் தங்களது நெருக்கமான நட்புறவினை உறுதிப்படுத்தி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்