TNPSC Thervupettagam

மிகப்பெரிய கருந்துளை இணைவு

July 20 , 2025 5 days 28 0
  • ஈர்ப்பு அலை கண்டுணர் கருவிகளைப் பயன்படுத்தி இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய கருந்துளை இணைவினை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • ஒன்றுக்கொன்று மோதுகின்ற இந்தக் கருந்துளைகளானது சூரியனின் நிறையை விட 103 மற்றும் 137 மடங்கு பெரிது ஆகும்.
  • அவை ஒன்றிணைந்து சூரியனின் நிறையை விட 265 மடங்கு பெரிய ஒற்றை கருந் துளையை உருவாக்கியது.
  • இந்த நிகழ்வானது பூமியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்தது மற்றும் LIGO ஆய்வகத்தினால் மிகவும் கண்டறியப்பட்ட விண்வெளி-நேர அலைகளை ஏற்படுத்தியது.
  • இந்தக் கருந்துளைகள் பூமியை விட சுமார் 400,000 மடங்கு வேகமாக சுழன்று கொண்டு இருந்தன.
  • இந்தக் கருந்துளைகள் ஆனது முந்தைய கருந்துளை இணைவுகளிலிருந்து உருவாகி இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர், இது அவற்றின் அதிக நிறை மற்றும் விரைவான சுழற்சியை விளக்குகிறது.
  • இதுவரையில், சுமார் 300 கருந்துளை இணைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால் இந்த இணைவு தான் மிகப் பெரியது மற்றும் மிகவும் சிக்கலானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்