TNPSC Thervupettagam

மிகப்பெரிய வறண்ட கப்பல் கட்டும் கூடம் - மும்பை

September 28 , 2019 2137 days 840 0
  • மும்பையில் உள்ள கடற்படையின் கப்பல் கட்டும் தளத்திற்கு உள்ளே இந்திய கடற் படை தனது மிகப்பெரிய வறண்ட கப்பல் கட்டும் கூடத்தைப் பெற்றுள்ளது.
  • இது 44,500 டன்கள் எடை கொண்ட இந்தியாவின் ஒரே விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா மற்றும் கொச்சியில் கட்டப்பட்டு வரும் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்த் ஆகியவற்றிற்குச் சேவை செய்யும்.
  • நாட்டின் மூன்று பக்கங்களிலிலும் கடலால் சூழப்பட்ட ஒரே வறண்ட கப்பல் கட்டும் கூடம் இதுவாகும்.
  • பழுது பார்ப்பு மற்றும் பரிசோதனை ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, ஒரு கப்பலானது இந்தக் கூடத்திற்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, அந்தக் கூடத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகின்றது.
  • கப்பல் தண்ணீரில் இருக்கும்போது செய்ய முடியாத பழுதுபார்ப்புப் பணிகள் இந்த வறண்ட கூடத்தில் நடைபெறுகின்றது.
இதுபற்றி
  • பம்பாய் கப்பல் கட்டும் தளமானது 1732 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • மும்பையில் உள்ள கடற் படையின் கப்பல் கட்டும் தளமானது பம்பாய் கப்பல் கட்டும் கூடம், டங்கன் கப்பல் கட்டும் கூடம் மற்றும் குரூசர் கிரேவிங் கப்பல் கட்டும் கூடம் ஆகிய மூன்று வறண்ட கப்பல் கட்டும் கூடங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்