இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் சீனா "புஜியன்" என்ற தனது மூன்றாவது விமானந் தாங்கிக் கப்பலை அறிமுகப் படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானந் தாங்கிக் கப்பலானது, மிகவும் மேம்படுத்தப் பட்ட மற்றும் "முழுமையாக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் கடற்படைக் கப்பல் ஆகும்.
இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட முதல் உந்துவிசை விமானந் தாங்கிக் கப்பல் ஆகும்.
சீனாவின் முதல் விமானந் தாங்கிக் கப்பல் ஆனது லியோனிங் ஆகும்.
சீன நாடானது உள்நாட்டிலேயே ‘ஷாண்டோங்’ என்ற 2வது விமானந் தாங்கிக் கப்பலை உருவாக்கியது.