மிகமிக முக்கியமான நபர்களின் (VVIPs) பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான முதலாவது விமானம்
October 6 , 2020 1764 days 628 0
நாட்டின் முதலாவது VVIP விமானமான போயிங் 777-300 இஆர் (Boeing 777-300 ER) ஆனது டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்காக வாங்கப் பட்டுள்ள இந்த 2 போயிங் விமானங்கள் ஏர் இந்தியா ஒன் எனப்படும்.
இது தகவலைத் திருடுதல் போன்ற எந்தவொரு இடர்ப்பாடும் இல்லாமல் நடுவானில் ஆடியோ மற்றும் காணொலிதகவல் தொடர்பை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் அமைப்பைக் கொண்டு உள்ளது.