டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகியவை உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பருவநிலை குழுவான IQAir என்பதனுடைய காற்றின் தரம் மற்றும் மாசுற்ற நகரக் கண்காணிப்புச் சேவை அமைப்பின் தரவுகளில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
டெல்லி நகரானது 556 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் முதலிடத்திலும், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகியவை இதில் முறையே 177 மற்றும் 169 என்ற காற்றுத் தரக் குறியீடுகளுடன் 4வது மற்றும் 6வது இடங்களிலும் உள்ளன.
மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.