அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள பைர்னிஹாட் பகுதியில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மிக அதிக காற்று மாசுபாடு அளவு பதிவானது.
இந்தத் தகவலை எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி 87 µg/m³ மாசுபாட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்பதோடு இது 40 µg/m³ என்ற தேசியச் சுற்றுப்புறக் காற்று தரத் தரத்தை (NAAQS) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஹாஜிபூர், காஜியாபாத், குருகிராம், சசாரம், பாட்னா, தல்ச்சர், ரூர்கேலா மற்றும் இராஜ்கிர் ஆகியவை பிற அதிக மாசுபட்ட நகரங்கள் ஆகும்.
அதே காலக் கட்டத்தில் ஐஸ்வால் (மிசோரம்) தூய்மையான நகரமாக தரவரிசைப் படுத்தப் பட்டது.