இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மிசோ மொழியைச் சேர்க்கக் கோரும் தீர்மானத்தை மிசோரம் சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றியது.
மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்ப்பது, 1950 ஆம் ஆண்டு பழங் குடியினர் ஆணையின் கீழ் மிசோ சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் (ST) அந்தஸ்தைப் பாதிக்காது.
தற்போது, எட்டாவது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரிக்கிறது, இந்த மொழிகள் வளர்ச்சி மற்றும் அரசுத் தேர்வுகள் மற்றும் நிர்வாகத்தில் பயன்படுத்துவதற்கான அரசாங்க ஆதரவைப் பெறுகின்றன.
மேகாலயாவில் உள்ள நடைமுறையைப் போலவே, மிசோரம் முழுவதற்கும் ஆறாவது அட்டவணை அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராயவும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.