TNPSC Thervupettagam

மிசோரம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

July 13 , 2026 15 hrs 0 min 28 0
  • தேசியப் பல்லுயிர் ஆணையத்தின் (NBA) பரிந்துரையின் பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) 2002 ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் கீழ் இந்தியாவின் 21-வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக மிசோரமில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (NHM) அறிவிக்கப் பட்டுள்ளது.
  • ஓர் அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியம் என்பது 2002 ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத் தன்மை சட்டத்தின் கீழ் அணுகப்படும் அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளைப் பாதுகாப்பதற்கும், பல்லுயிர் பாதுகாப்பிற்கான பதிவேடுகளைப் பராமரிப்பதற்கும் பொறுப்பான ஒரு நிறுவனமாகும்.
  • மிசோரம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 2022-ஆம் ஆண்டில் மத்திய பல்கலைக் கழகமான மிசோரம் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டதுடன் மேலும் இது இந்தோ-பர்மா பல்லுயிரிய வள மையத்தில் அமைந்துள்ளது.
  • இந்த அருங்காட்சியகம் பெரணி தாவரங்கள் (pteridophytes) மற்றும் பெரும் பூஞ்சைகள் போன்ற தாவரங்களின் மாதிரிகளையும், ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், அந்துப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட விலங்கினங்களின் மாதிரிகளையும் பாதுகாக்கும்.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் மாதிரி வகைகளுக்கான களஞ்சியமாகவும் இது செயல்படுவதுடன் உயிரினங்களை அடையாளம் காணுதல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்