TNPSC Thervupettagam

மிசோராமை நோக்கி வரும் சின் அகதிகள்

July 20 , 2025 3 days 26 0
  • சின் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு இடையேயான பல வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மியான்மரின் சின் மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 4,000க்கும் மேற்பட்ட அகதிகள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மிசோராம் மாநிலத்தின் சாம்பாய் மாவட்டத்திற்குள் நுழைந்தனர்.
  • சின்கள் இந்தியாவில் உள்ள மிசோக்களுடன் தொடர்புடைய ஒரு இனக்குழுவாகும்.
  • அவர்களில் பலர் மியான்மரின் இராணுவத்தினை எதிர்த்துப் போராடும் இராணுவ எதிர்ப்புக் குழுக்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.
  • மிசோராமின் மிசோ மக்கள் சின்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் எல்லைகளில் அனைத்து இயக்கமும் 2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
  • மிசோரம் தங்குமிடம் மற்றும் உதவியை வழங்கினாலும், வள நெருக்கடியினை எதிர் கொள்கிறது மற்றும் அங்கு குடிமக்கள் அல்லாதவர்களைப் பதிவு செய்யவும் அனுமதி கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்