"இந்தியத் தரநிலை வாரியமானது" சமீபத்தில் "களிமண்ணால் செய்யப்பட்ட மின்சாரமின்றி இயங்கும் குளிரூட்டும் கலனான அல்லது "மிட்டிகூல் குளிர்சாதனப் பெட்டிக்கான" இந்தியத் தரநிலையை உருவாக்கியது.
இதற்காக உருவாக்கப்பட்ட தரநிலையானது, “IS 17693: 2022” என்பது ஆகும்.
குஜராத்தைச் சேர்ந்த மன்சுக் பாய் பிரஜாபதி என்பவரால் மிட்டிகூல் குளிர்சாதனப் பெட்டியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிட்டிகூல் என்பது பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் குளிர்ச்சியான நீர் ஆகிய பொருட்களைச் சேமிப்பதற்கான களிமண்ணாலான ஒரு இயற்கை குளிர்சாதனப் பெட்டியாகும்.
இதைப் பயன்படுத்திச் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.