செல்கள் வெப்பமாக வெளியிட்டு அதிக ஆற்றலை எரிப்பதன் மூலம் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்க உதவச் செய்யும் வகையில் அறிவியலாளர்கள் "மிதமான மைட்டோ காண்ட்ரியல் இணைப்பு நீக்கிகளை" ஆராய்ந்து வருகின்றனர்.
மைட்டோகாண்ட்ரியல் என்பது உணவை அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ATP) எனப் படும் வேதியியல் ஆற்றலாக மாற்றும் செல் கட்டமைப்புகள் ஆகும் என்பதோடுஇது தசைகள், மூளை மற்றும் உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
உடல் பருமனில், மக்கள் அவர்களின் உடல் எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொள்கிறார்கள், எனவே செல்களில் ஆற்றல் பயன்பாடு அதிகரிப்பது எடையைக் குறைக்கலாம்.
இதற்கு முந்தைய மைட்டோகாண்ட்ரியல் இணைப்பு நீக்கிகள் மிகவும் வலுவாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருந்ததால் அதிக வெப்பமடைதல், உறுப்புச் செயலிழப்புகள் மற்றும் மரணத்தை ஏற்படுத்தியதால் அவை ஆபத்தானவையாகும்.
புதிய "மிதமான" இணைப்பு நீக்கிகள் ஆற்றல் பயன்பாட்டை மெதுவாக அதிகரிக்கின்றன என்ற நிலையில், இதனால் கூடுதல் கலோரிகள் ஒரு பாதுகாப்பான வகையில் எரிக்கப் படுகின்றன மற்றும் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அவை குறைக்கின்றன.
மிதமான இணைப்பு நீக்கிகள் வயதாவதைத் தடுக்கவும், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்புச் சிதைவு நோய்களைத் தடுக்கவும் உதவும்.