ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி வீரர்களைச் சோதிக்க இஸ்ரோ மித்ரா திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மித்ரா திட்டமானது (பரஸ்பர இயங்குதன்மைக் கொண்ட பண்புகளின் வரைபடம் மற்றும் பதில் மதிப்பீடு) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 9 வரை லே பகுதியில் நடத்தப்படுகிறது.
தீவிரமான சூழ்நிலைகளில் நான்கு விண்வெளி வீரர்களின் உடல், மன மற்றும் நடத்தை ரீதியான செயல்பாடுகள் சோதிக்கப்படும்.
இத்திட்டம் குழுப்பணி, முடிவெடுத்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை ஆய்வு செய்கிறது.
இது இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயண மையம் மற்றும் இந்திய விமானப் படையின் விண்வெளி மருத்துவக் கழகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப் படுகிறது.
விண்வெளிச் சூழலைப் போன்ற அதிக உயரம், குறைந்த ஆக்சிஜன் மற்றும் தீவிரப் பருவநிலை நிலவுவதால் லடாக் இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.