புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதியில் (கேரளா மற்றும் தமிழ்நாடு) மட்டுமே காணப்படுகின்றன.
இந்த இனங்களானது இதுவரை கண்டறியப்பட்ட சிறிய வகை மினர்வரியன் தவளை இனங்களில் ஒன்றாகும்.
இது டைக்ரோகுளோசிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு முறையான ஆய்வகத்தை நிறுவுவதற்கு மகத்தான ஆதரவு மற்றும் ஊக்கத்தை வழங்கிய பேராசிரியர் தீபக் பென்டல் என்பவரைக் கௌரவிக்கும் வகையில் இந்த இனங்களுக்கு அவருடையப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.