இந்தியாவில் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ₹14,500 கோடி மதிப்பிலான நம்பகத்தன்மை இடைவெளி நிதி (VGF) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
இந்தியா முழுவதும் 92 கிகாவாட் மணிநேர (GWh) புதிய ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நீரேற்று மின் சேமிப்பு திட்டங்கள் (PSP), மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் பிற மாற்று ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும்.
ஆற்றல் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதன் மூலமும் மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.