மின் விநியோக நிறுவனங்களின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்துக்கள்
September 24 , 2025 3 days 17 0
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை இந்தியாவின் 3 லட்சம் கோடி மின்சார விநியோக நிறுவனங்களின் (DISCOMS) ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்துக்களில் (RA) பெரும் பங்கைக் கொண்டுள்ளன.
DISCOMS நிறுவனங்களால் ஏற்படும் செலவினங்கள் ஆனது சரியான நேரத்தில் கட்டணத் திருத்தங்கள் மூலம் மீட்கப்படா விட்டால் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்துக்கள் (RA) உருவாகின்றன.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டின் DISCOMS நிறுவனங்கள் 83,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்துக்களைக் கொண்டிருந்தன.
சொத்து மற்றும் பொறுப்பு பரவலுக்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழக லிமிடெட் (TANGEDCO) நிறுவனத்தினை பின்வருமாறு மறுசீரமைத்து உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக லிமிடெட் (TNPGCL) – 27%,
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக லிமிடெட் (TNGECL) – 2%, மற்றும்
தமிழ்நாடு மின் விநியோக கழக லிமிடெட் (TNPDCL) – 71%,
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்துக்கள் TNPGCL நிறுவனத்திற்கு 22,110.16 கோடி ரூபாயாகவும், TNGECL நிறுவனத்திற்கு 1,851.71 கோடி ரூபாயாகவும் மற்றும் TNPDCL நிறுவனத்திற்கு 59,038.14 கோடி ரூபாயாகவும் முன்மொழியப்பட்டன.
உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகளில் கடந்த கால ஒழுங்குமுறைக்கு உட்பட்டச் சொத்துக்களைத் தீர்க்க உத்தரவிட்டுள்ளதோடு மேலும் புதிய ஒழுங்குமுறைக்கு உட்பட்ட சொத்து உருவாக்கத்தை வருடாந்திர வருவாய் தேவையில் (ARR) 3% ஆகக் வரம்பு நிர்ணயித்துள்ளது என்ற ஒரு நிலைமையில் மேலும் மின்சாரத்திற்கான மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (APTEL) அதற்கான இணக்கத்தை மேற்பார்வையிடுகிறது.
தமிழ்நாட்டின் மொத்தத் தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகள் 2017–18 ஆம் ஆண்டில் 18.73 சதவீதத்திலிருந்து 2024–25 ஆம் ஆண்டில் 10.73% ஆகக் குறைக்கப் பட்டு உள்ளன.
விநியோகத்திற்கான சராசரி செலவினம் - சராசரி வருவாய் (ACS–ARR) இடைவெளி ஒரு அலகுக்கு 0.04 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.