TNPSC Thervupettagam

மின்கல அடுக்குக் கழிவு மேலாண்மை விதிகள் 2022

August 29 , 2022 1043 days 1427 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது 2022 ஆம் ஆண்டு மின்கல அடுக்குக் கழிவு மேலாண்மை விதிகளை வெளியிட்டது.
  • இது மின்கல அடுக்குக் கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேலாண்மை செய்வதை உறுதி செய்வதையும், 2001 ஆம் ஆண்டு மின்கல அடுக்குகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளை மாற்றியமைப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த விதிகள் மின்சார வாகனத்தின் மின்கல அடுக்குகள், எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய மின்கல அடுக்குகள், வாகன மின்கல அடுக்குகள் மற்றும் தொழில்துறை மின்கல அடுக்குகள் ஆகிய அனைத்து வகையான மின்கல அடுக்குகளையும் உள்ளடக்கியதாகும்.
  • இந்த விதிகள் ஒரு நெறிமுறையையும், மையப்படுத்தப்பட்ட இணைய தளத்தினையும் அமைக்க வழிவகை செய்யும்.
  • தயாரிப்பாளர்கள் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள்/புதுப்பிப்பு நிறுவனங்கள் ஆகியோர் இடையே உற்பத்தியாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, விரிவாக்கப் பட்ட உற்பத்தியாளர் பொறுப்புகள் என்ற சான்றிதழ்களைப் பரிமாறிக் கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த விதியானது மின்கல அடுக்குகளின் கழிவுகளில் இருந்து சில குறிப்பிட்டப் பொருட்களை மீட்டெடுப்பதற்கான குறைந்தபட்ச சதவீத நிர்ணயத்தினைக் கட்டாயம் ஆக்குகிறது.
  • இந்த மீட்சியானது, மறுசுழற்சி மற்றும் புதுப்பித்தல் துறையில் புதிய தொழில் நுட்பங்களையும் முதலீட்டையும் கொண்டு வந்து புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும்.
  • புதிய மின்கல அடுக்குகளைத் தயாரிப்பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதையும் இந்த விதிகள் பரிந்துரை செய்கின்றன.
  • இது புதிய மூலப்பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து இயற்கை வளங்களைச் சேமிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்