February 12 , 2026
13 hrs 0 min
35
- சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய மின்சாரச் சந்தைகள் குறித்த மின்சாரம் 2026 எனும் அறிக்கையை வெளியிட்டது.
- உலகளாவிய மின்சாரத் தேவை 2030 வரை ஆண்டுதோறும் 3.6% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த வளர்ச்சி மின்சார வாகனங்கள், தரவு மையங்கள் மற்றும் காற்றுப் பதனிகள் பயன்பாடு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி போன்ற குறைந்த உமிழ்வு மூலங்கள் பெரும்பாலான கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த மூலங்கள் 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மின்சார உற்பத்தியில் கிட்டத் தட்ட பாதியைக் கொண்டிருக்கலாம்.
- உலகளாவிய மின்சாரத் துறைசார் கார்பன் டை ஆக்சைடு (CO₂) உமிழ்வுகள் ஒரு நிலையான மட்டத்திற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Views:
35