நிதி ஆயோக் அமைப்பானது, "Unlocking a 200 billion Dollar Opportunity: Electric Vehicles in India" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை புது டெல்லியில் வெளியிட்டது.
மின்சார வாகனப் பயன்பாட்டு ஏற்பினை விரைவுபடுத்துவதற்கான ஊக்கத்தொகை முறைக்குப் பதிலாக கட்டாய மற்றும் ஊக்கத் தொகை நீக்கங்களில் கவனம் செலுத்துவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகமான செயல் திறன் கொண்ட வாகனப் பிரிவுகள் மற்றும் புவியியல் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
இங்கு நிதி ஆயோக் அமைப்பானது முதல் இந்திய மின்சார வாகனப் போக்குவரத்து குறியீட்டையும் (IEMI) அறிமுகப்படுத்தியது.
IEMI ஆனது 16 குறிகாட்டிகளின் அடிப்படையில் 100 மதிப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குகிறது.
இந்தக் குறிகாட்டிகள் மூன்று முக்கியக் கருப்பொருள்களின் கீழ் தொகுக்கப் பட்டு உள்ளன:
போக்குவரத்து மின்மயமாக்கலில் முன்னேற்றம்,
மின்னேற்ற உள்கட்டமைப்புத் தயார்நிலை மற்றும்
மின்சார வாகன ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிலை.
இந்தியா முழுவதும் மின்சார வாகனப் போக்குவரத்தில் உள்ள தேவை சார்ந்த ஏற்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதுமைகளைக் கண்காணிக்க இந்தக் குறியீடு உதவுகிறது.