TNPSC Thervupettagam

மின்சார வாகன பயன்பாட்டு வாய்ப்பு குறித்த அறிக்கை

August 8 , 2025 13 days 60 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "Unlocking a 200 billion Dollar Opportunity: Electric Vehicles in India" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை புது டெல்லியில் வெளியிட்டது.
  • மின்சார வாகனப் பயன்பாட்டு ஏற்பினை விரைவுபடுத்துவதற்கான ஊக்கத்தொகை முறைக்குப் பதிலாக கட்டாய மற்றும் ஊக்கத் தொகை நீக்கங்களில் கவனம் செலுத்துவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதிகமான செயல் திறன் கொண்ட வாகனப் பிரிவுகள் மற்றும் புவியியல் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
  • இங்கு நிதி ஆயோக் அமைப்பானது முதல் இந்திய மின்சார வாகனப் போக்குவரத்து குறியீட்டையும் (IEMI) அறிமுகப்படுத்தியது.
  • IEMI ஆனது 16 குறிகாட்டிகளின் அடிப்படையில் 100 மதிப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குகிறது.
  • இந்தக் குறிகாட்டிகள் மூன்று முக்கியக் கருப்பொருள்களின் கீழ் தொகுக்கப் பட்டு உள்ளன:
    • போக்குவரத்து மின்மயமாக்கலில் முன்னேற்றம்,
    • மின்னேற்ற உள்கட்டமைப்புத் தயார்நிலை மற்றும்
    • மின்சார வாகன ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிலை.
  • இந்தியா முழுவதும் மின்சார வாகனப் போக்குவரத்தில் உள்ள தேவை சார்ந்த ஏற்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதுமைகளைக் கண்காணிக்க இந்தக் குறியீடு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்