TNPSC Thervupettagam

மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்

November 10 , 2021 1382 days 557 0
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நிகர-பூஜ்ஜிய கார்பன் என்ற ஒரு இலக்கினை அடைய உதவுவதற்காக ஆயிரக்கணக்கான மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அரசினால் இயக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC - Indian Oil Corporation) நிறுவனமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை அமைக்க உள்ளது.
  • அதன் செயல்பாடுகளில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டங்களையும் அது உருவாக்கி வருகிறது.
  • பாரத் பெட்ரோலியம் நிறுவனமானது அடுத்த சில ஆண்டுகளில் அதற்குச் சொந்தமான 7,000 எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகன மின்னேற்றத்திற்கான ஒரு உள்கட்டமைப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.
  • ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமானது இன்னும் மூன்று ஆண்டுகளில் நாட்டில் 5,000 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கான  ஒரு திட்டத்தை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்