மின்னணு சிகரெட்டுகளின் தடை மீதான மசோதா – நிறைவேற்றம்
December 10 , 2019 2085 days 639 0
மின்னணு சிகரெட்டுகளின் தடை மீதான (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) மசோதா, 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு, வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றைத் தடை செய்ய முற்படும் இந்த மசோதாவானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பிக்கப் பட்ட அவசரச் சட்டத்தை மாற்றுகின்றது.
பின்புலம்
2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கான ஒரு இலட்சிய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
ஏற்கெனவே 16 மாநிலங்கள் மின்னணு சிகரெட்டைத் தடை செய்துள்ளன.