மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையமானது குட்காப் பொடி மற்றும் மின்னணு சிகரெட்டுகள் உள்பட மின்னணு மூலம் உடலில் நிக்கோட்டினை செலுத்தும் என்ட்ஸ் (ENDS - Electronic Nicotine Delivery Systems) எனப்படும் மின்னணு சிகரெட்டின் விளம்பரம், இறக்குமதி, உற்பத்தி, விற்பனை ஆகியவற்றை தங்களதுப் பிராந்தியங்களில் அனுமதிக்கக் கூடாது என்று மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மருந்து கட்டுப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிக்கையினைத் தொடர்ந்து நாடெங்கிலும் 12 மாநிலங்களில் என்ட்ஸ் அல்லது மின்னணு சிகரெட்டுகளானது தடை செய்யப்பட்டுள்ளது.
ENDS
மின்னணு மூலம் உடலில் நிக்கோட்டினை செலுத்தும் என்ட்ஸ் என்ற பெயரானது பழங்கால சிகரெட் புகைபிடித்தலுக்கு மாற்றாக மின்கலனால் இயக்கக்கூடிய ஒரு கையடக்கக் கருவி என்பதைக் குறிக்கிறது.
இது புகையிலையின் மூலமான எந்தவித பக்க விளைவுகள் இல்லாமலும் மூச்சுக்குழல் வழியாக நிக்கோட்டினை செலுத்துகிறது.
மின்னணு சிகரெட்டுகள், மின்னணு குட்கா, மின்னணு சுருட்டுகள், ஆவியாக்குதல் சாதனம் போன்றவை ENDS-ன் சில வகைகளாகும். மேலும் இந்த வகைகள் சிகரெட் புகைப் பிடித்தலுக்கு மாற்றாக வளர்ந்து வருகிறது.