தேசிய பங்குச் சந்தையானது (NSE), 2026 ஆம் ஆண்டில் மின்னணு தங்க வைப்பு ரசீது (EGR) வர்த்தகத்தைத் தொடங்கியது.
EGR என்பது செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற பெட்டகங்களில் சேமிக்கப்பட்டுள்ள தங்கத்தைக் குறிப்பதோடு இது செபியால் ஒழுங்குமுறைப் படுத்தப் பட்ட டிஜிட்டல் ஆவணங்களாகும்.
ஒவ்வொரு EGR-ம் 995 அல்லது 999 தூய்மை கொண்ட தங்கத்தைக் குறிப்பதுடன் இவை NSDL அல்லது CDSL கணக்குகள் மூலம் டிமேட் (Demat) வடிவில் பாதுகாக்கப்படுகிறது.
EGR வர்த்தகம் மும்பை பங்குச் சந்தையில் (BSE) 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், தேசிய பங்குச் சந்தையில் (NSE) 2026 ஆம் ஆண்டிலும் T+1 தீர்வு முறையுடன் தொடங்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் உரிய திரும்பப் பெறும் கட்டணங்கள் மற்றும் 3% ஜிஎஸ்டி செலுத்தி, EGR-களை நேரடி தங்கக் கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ மாற்றிக் கொள்ளலாம்.
ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் தங்கத் தளங்களுடன் ஒப்பிடுகையில், EGR-கள் வெளிப்படையான விலை நிர்ணயம், பரிவர்த்தனை வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பை வழங்குகின்றன.