மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தையின் புதிய அம்சங்கள்
April 4 , 2020 1948 days 1259 0
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தை (e-NAM/ Electronic National Agriculture Market) தளத்தின் புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
இவை வேளாண் சந்தையை வலுப்படுத்துவதையும் விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை விற்பதற்காக நேரடியாக மண்டிக்கு கொண்டு வருவதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
e-NAM என்பது வேளாண் பொருட்களுக்கான ஒரு நிகழ்நேர வர்த்தகத் தளமாகும். இந்த நிகழ் நேர வர்த்தகத்தின் மூலம் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் வேளாண் பொருட்களைப் பெறுபவர்கள் ஆகியோருக்கு உதவுவதையும் எளிமையான சந்தையிடல் மூலம் சிறந்த விலையைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்திய அரசினால் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக அமைப்பானது e-NAMஐச் செயல்படுத்தும் தலைமை அமைப்பாகும்.
வேளாண் அமைச்சகத்தின் படி, தற்பொழுது 16 மாநிலங்களில் உள்ள 585 மண்டிகள் (சந்தைகள்) e-NAM தளத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.