மின்னணு வழி பணப்பிடித்தம் தொடர்பான விதிமுறைகள் 2026
April 24 , 2026 2 days 66 0
இந்திய ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான மின்னணு வழி பணப்பிடித்தம் தொடர்பான விதிமுறைகள் 2026-ஐ வெளியிட்டது.
இந்தக் விதிமுறைகளானது, அட்டைகள், UPI மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட கட்டணக் கருவிகள் மூலம் செய்யப்படும் தொடர்ச்சியான டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான விதிகளை தரப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்கள் கூடுதல் அங்கீகார அமைப்புடன் (AFA) ஒரு முறை பதிவை முடிக்க வேண்டும்.
₹15,000 வரையிலான தொடர் கட்டணங்களை AFA இல்லாமல் செய்யலாம்; காப்பீடு, பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் அட்டைகளுக்கு இந்த வரம்பு ₹1 லட்சமாகும்.
வங்கிகள் பரிவர்த்தனைக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அனுப்ப வேண்டும் மற்றும் அதிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தையும் வழங்க வேண்டும்.
மின்னணு வழி பணப்பிடித்தம் வசதியைப் பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதோடுஇது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது.