TNPSC Thervupettagam

மின்னணுத் திட்டங்கள்

November 1 , 2025 3 days 23 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது 7 ​​தனியார் மின்னணுக் கூறு உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதற்கான மொத்த முதலீடு 5,532 கோடி ரூபாயாகும்.
  • ஐந்து திட்டங்கள் தமிழ்நாட்டிலும், தலா ஒன்று மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் நிறுவப்பட உள்ளன.
  • கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா நிறுவனமானது அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள், ஒளிப்படக் கருவி தொகுதியின் துணை நிலை ஒருங்கு சேர்ப்புக் கூறுகள் மற்றும் தகடுகளை உருவாக்க 3,280 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
  • தமிழ்நாட்டில் அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் (PCB) உற்பத்தி மையத்தினை உருவாக்க அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் 991 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
  • இந்தத் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்கான மின்னணுக் கூறு உற்பத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்