மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்பவை 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் கையெழுத்தாகின.
மின்ஸ்க் – I
உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் 2014 ஆம் ஆண்டில் பெலாரஸ் தலைநகரில் 12 அம்ச போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
இதில் கைதிகள் பரிமாற்றம், மனிதாபிமான உதவி வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்களைத் திரும்பப் பெறல் ஆகிய விதிகள் அடங்கும்.
இரு தரப்பிலும் விதிமீறல்கள் ஏற்பட்டதால் இந்த ஒப்பந்தம் விரைவில் கைவிடப்பட்டது.
மின்ஸ்க் - II
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாட்டின் பிரதிநிதிகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், இரண்டு ரஷ்யா சார்பு பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் 2015 ஆம் ஆண்டில் 13 அம்ச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
அதே சமயத்தில் மின்ஸ்க் நகரில் கூடியிருந்த பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவான ஓர் அறிவிப்பினை வெளியிட்டனர்.
ரஷ்யா இந்த மோதலில் ஓர் அங்கம் இல்லை என்பதனால் அதன் விதிமுறைகள் தனக்கு பொருந்தாது என ரஷ்யாவின் வலியுறுத்துவது தான் இதில் மிகப்பெரிய ஒரு தடை ஆகும்.