TNPSC Thervupettagam

மில்லியனர் இடம்பெயர்வு அறிக்கை 2025

July 19 , 2025 2 days 9 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி தனிநபர் செல்வ வள இடம்பெயர்வு அறிக்கையில், இந்த ஆண்டு உலகளவில் சுமார் 142,000 மில்லியனர்கள் அல்லது அதிக நிகர மதிப்பு உள்ள தனிநபர்களின் (HNWIs) இடம்பெயர்வைப் பதிவு செய்துள்ளது.
  • சுமார் 3,500 மில்லியனர்களின் நிகர வெளியேற்றத்துடன் இந்தியா உலகளவில் 57வது இடத்தில் உள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 9,800 மில்லியனர்களை ஈர்த்து இதில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து அமெரிக்கா (7,500) மற்றும் இத்தாலி (3,600) உள்ளன.
  • புலம்பெயர்ந்தோர், மீண்டும் வரும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காரணமாக 2,400 மில்லியனர்களைப் பெற்று சவுதி அரேபியா மிக வேகமாக வளர்ந்து வரும் இடமாக உள்ளது.
  • 16,500 மில்லியன் டாலர் வெளியேற்றத்துடன் ஐக்கியப் பேரரசு முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா 7,800 மில்லியன் டாலர் வெளியேற்றத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • புலம்பெயர்வு இருந்த போதிலும், இந்தியாவின் மில்லியனர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 72% அதிகரித்துள்ளது என்பதோடு இது வலுவான உள்நாட்டுச் செல்வ வள உருவாக்கத்தைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்