மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளைக் கொண்டவர்கள் பற்றிய ஹுருன் அறிக்கை
February 21 , 2022 1248 days 622 0
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை என்பது 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹுருன் அறிக்கை கூறுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை 30% என்ற ஒரு அளவில் அதிகரித்து 6,00,000 என்ற அளவை எட்டும் என ஹுருன் அறிக்கை கூறுகிறது.
அதிக எண்ணிக்கையிலான மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட குடும்பங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் தற்போது மும்பை உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.