மில்லியன் வடிவமைப்பாளர்கள், பில்லியன் கணக்கான கனவுகள்
August 14 , 2024 354 days 326 0
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா–தேசியக் கிராமப்புற வாழ்வாதாரத் திட்ட அமைப்பானது (DAY-NRLM), "மில்லியன் வடிவமைப்பாளர்கள், பில்லியன் கணக்கான கனவுகள்" என்ற முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்களுக்கு, சிக்கலான சமூகச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான விரிவான திட்ட உருவாக்க தகவலைப் பெறுவதற்கான அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது விரிவான திட்ட உருவாக்கத் தகவலின் மூலம் தனிநபர்களின் திறனை நன்கு மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான முன்னெடுப்பு ஆகும்.
இது கிராமப்புறத் தலைவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் கிராம தொழில் முனைவோர் ஆகியோரை இலக்காகக் கொண்டு, நலன் மிகு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வகைத் தீர்வுகளை உருவாக்கும் திறன்களை அவர்களுக்கு வழங்குகிறது.