May 11 , 2019
2417 days
877
- இந்தியாவைச் சேர்ந்த மிளகாய்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு நடைமுறை ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
- மிளகாய்த் தூள் என்பது மிளகாயிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மீதமிருக்கும் பொருளாகும்.
- இது மிளகாய்க் குழம்பு மற்றும் இதரவற்றை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப் பொருளாகும்.
- மிளகாயை உற்பத்தி செய்தல், நுகர்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றில் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகின்றது.
- மிளகாயானது இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு நறுமணப் பொருளாகும்.
- சீனா ஏற்கனவே பின்வரும் இந்திய உணவுத் தயாரிப்புகளை தங்களது சந்தையில் விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.
| பொருள் |
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு |
| மாம்பழம் |
2003 |
| பாகற்காய் |
2005 |
| திராட்சைப் பழம் |
2005 |
| கடுகு எண்ணெய் உணவு |
2015 |
| பாசுமதி அரிசி |
2006 |
| பாசுமதி மற்றும் பாசுமதியற்ற அரிசி |
2018 |
| மீன் உணவு / எண்ணெய் |
2018 |
| புகையிலை இலைகள் |
2019 |
| மிளகாய்த் தூள் உணவு |
2019 |
Post Views:
877