TNPSC Thervupettagam
July 28 , 2018 2808 days 944 0
  • மத்தியப் பிரதேசத்தின் திகம்கார்கைச் சேர்ந்த தேஷ்னா ஜெயின் (20), 2018 ஆம் ஆண்டின் காது கேளாதவருக்கான மிஸ் ஆசியா பட்டத்தினையும் 2018 ஆம் ஆண்டின் காது கேளாதவருக்கான மிஸ் சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்று இரு பட்டங்களையும் வென்றுள்ளார். இப்போட்டி தைவானின் தைபேயில் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது.
  • மேலும் 20 வயதில் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இளம் போட்டியாளர் இவராவார்.
  • மிகவும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச காது கேளாதவருக்கான மிஸ் மற்றும் மிஸ்டர் அலங்கார அணி வகுப்பில் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வெல்வது இதுவே முதல்முறையாகும்.
  • இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காதுகேளாதவருக்கான மிஸ் இந்தியா போட்டியில் தேஷ்னா வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்