TNPSC Thervupettagam

மிஹிர் ராஜேஷ் ஷா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான வழக்கு

November 11 , 2025 15 hrs 0 min 41 0
  • மிஹிர் ராஜேஷ் ஷா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம், கைதுக்கான எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்கத் தவறினால் அந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானதாகும் என்று கூறி தீர்ப்பளித்தது.
  • குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நீதிபதி முன் சமர்ப்பிப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க வேண்டும்.
  • கைது செய்யப்பட்ட நபருக்குப் புரியும் மொழியில் தகவல் வழங்கப்பட வேண்டும்.
  • இந்தத் தீர்ப்பு ஆனது முறையே தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்கின்ற  அரசியலமைப்பின் 21 மற்றும் 22(1) ஆகிய சரத்துகளை ஆதரிக்கிறது.
  • இந்தத் தீர்ப்பு ஆனது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் உள்ளவை உட்பட அனைத்து குற்றங்களுக்கும் பொருந்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்