மீக்கடத்துத் திறன் கொண்ட இணைவு காந்த அமைப்பு - ITER
July 19 , 2025 3 days 14 0
தூய்மையான ஆற்றலுக்காக உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த சாதனம் ஆனது 2025 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது.
சர்வதேச அதிவெப்ப அணுக்கரு இணைவுச் சோதனை உலை (ITER) திட்டம் தற்போது தெற்கு பிரான்சில் 180 ஹெக்டேர் தளத்தில் கட்டுமானத்தில் உள்ளது.
இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் உலகின் மிகப்பெரிய டோகாமாக் அணு உலையை உருவாக்க கூட்டு சேர்ந்துள்ளன.
இது ஒரு பெரிய அளவிலான மற்றும் கார்பன் இல்லாத ஆற்றல் மூலமாக அணுக்கரு இணைவின் சாத்தியக் கூறுகளைச் செயல் விளக்குவதற்கான ஒரு காந்த இணைவு சாதனமாகும்.
அணுக்கரு இணைவு ஆனது இரண்டு ஒளி கருக்களை இணைப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்குகிறது, இதனால் ஒரு கனமான கரு உருவாகிறது.
அணுக்கரு இணைவு வினைகள் சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றன.
அணுக்கரு இணைவு என்பது ஒரு பாதுகாப்பான, கார்பன் இல்லாத மற்றும் நிலையான ஆற்றல் மூலமாக இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதே ITER உலைக் கட்டமைப்பயு திட்டத்தின் நோக்கமாகும்.
இது 150 மில்லியன் டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையில் அணுக்கரு இணைவை நன்கு மேற்கொள்ள வேண்டி டியூட்டீரியம் மற்றும் ட்ரிடியம் (ஹைட்ரஜன் ஐசோடோப்புகள்) கூறுகளைப் பயன்படுத்துகிறது.
வெறும் 50 மெகாவாட் உள்ளீட்டு வெப்ப ஆற்றலிலிருந்து 500 மெகாவாட் இணைவு சக்தியை (10 மடங்கு) உற்பத்தி செய்து, 10 என்ற அணுக்கரு இணைவு செயல் திறனை (Q) அடைவதே இதன் இலக்கு ஆகும்.