மீண்டும் பயன்படுத்தக்கூடிய (மறுபயன்பாடு கொண்ட) ஏவு வாகனங்கள்
August 11 , 2019
2104 days
722
- சீனாவின் புதிய நிறுவனமான லிங்க்ஸ்பேஸ் நிறுவனம் RLV – 75 என்ற ஒரு மறுபயன்பாடு கொண்ட ஏவு வாகனத்தின் (ராக்கெட்) சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளிப் பயன்பாடு ஆகியவற்றின் மிகப்பெரிய தடுப்பாக விண்வெளியை அணுகுவதற்கான செலவு உள்ளது.
- மறுபயன்பாடு கொண்ட ஏவு வாகனம் என்பது குறைந்த செலவு, நம்பத் தகுந்த மற்றும் தேவைக்கேற்ப விண்வெளியை அணுகுதல் ஆகியவற்றை அடைவதற்கான ஒரு ஒருமித்த தீர்வாகும்.
- இதேபோன்ற தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், சீனாவின் ஐஸ்பேஸ் ஆகிய இதர தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன.
- இஸ்ரோவின் மறுபயன்பாடு கொண்ட ஏவு வாகனம் - தொழில்நுட்பச் செயல்விளக்கத் திட்டமும் இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
Post Views:
722