“An Eye on Methane 2025: From Measurement to Momentum” என்ற ஐந்தாவது IMEO அறிக்கையானது உலகளவில் மீத்தேன் குறைப்பு முயற்சிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.
தற்போதையப் புவி வெப்பமடைதலில் மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகள் தோராயமாக மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாகின்றன.
சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகம் (IMEO) ஆனது, மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான திறந்த மற்றும் செயல்படக் கூடிய தரவை அரசாங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.
தரவு ஆதாரங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீத்தேன் கூட்டாண்மை 2.0 மூலம் தொழில்துறை அறிக்கையிடல், மீத்தேன் எச்சரிக்கை மற்றும் மறு நடவடிக்கை அமைப்பு வழியாக செயற்கைக்கோள் வழி கண்டறிதல், உலகளாவிய மீத்தேன் ஆய்வுகள் மற்றும் தேசிய உமிழ்வு ஆய்வுகள் ஆகியவை அடங்கும்.
பருவநிலை மாற்ற மீள் எழுச்சி நிலைகள் மீறுவதைத் தடுக்க, அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் மீத்தேன் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.