TNPSC Thervupettagam

மீநிலை ஹீலியம் நட்சத்திரம் - A980

June 23 , 2025 6 days 70 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) அறிவியலாளர்கள், நட்சத்திரத்தில் மீநிலை ஹீலியம் - A980 இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இத்தொலைதூர நட்சத்திரம் A980 ஆனது, ஓபியுச்சஸ் விண்மீன் திரளில் தோராயமாக 25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஆரம்பத்தில் இது ஹைட்ரஜன் குறைபாடுள்ள கார்பன் (HdC) நட்சத்திரம் என்று நம்பப் பட்டது.
  • இந்த மர்மமான வானியல் அமைப்பானது தற்போது மீநிலை ஹீலியம் (EHe) கொண்ட நட்சத்திரமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த வகை நட்சத்திரத்தில் இதற்கு முன்பு கண்டறியப்படாத, அயனியாக்கம் செய்யப்பட்ட ஒற்றை ஜெர்மானியம் (Ge II) என்ற ஓர் அரிய உலோகத் தனிமம் இருக்கச் செய்வதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டறிந்தனர்.
  • இது ஒரு EHe நட்சத்திரத்தில் ஜெர்மானியம் இருப்பது உறுதி செய்யப்பட்ட முதலாவது கண்டறிதல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்