TNPSC Thervupettagam

மீனாம்பாள் சிவராஜ்

March 8 , 2026 2 days 59 0
  • பட்டியல் சாதியினரின் (SCs) உரிமைகள் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்கான போராட்டத்தில் மீனாம்பாள் சிவராஜ் ஒரு முன்னோடி நபராக இருந்தார்.
  • மீனாம்பாள் சிவராஜ் டிசம்பர் 12, 1904 அன்று பர்மாவின் ரங்கூனில் வி.ஜி. வாசுதேவ பிள்ளை மற்றும் மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார்.
  • அவரது தந்தை பர்மாவில் ஒரு முக்கியப் பட்டியல் சாதியினத் தலைவர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
  • அவர் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதல் பட்டியல் சாதியின உறுப்பினரானார்.
  • 1918 ஆம் ஆண்டில், மீனாம்பாள் மெட்ராஸைச் சேர்ந்த சட்டப் பட்டதாரியும், பட்டியல் சாதியினரின்  உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவராஜை மணந்தார்.
  • 1928 ஆம் ஆண்டில், சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது, மீனாம்பாள் அதை ஆதரித்தார்.
  • காலப்போக்கில், மீனாம்பாள் பி.ஆர். அம்பேத்கர், பெரியார் ஈ.வி. ராமசாமி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற முக்கியத் தலைவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணி ஆற்றினார்.
  • மீனாம்பாளின் மிக முக்கியமானப் பங்களிப்புகளில் ஒன்று, டாக்டர் அம்பேத்கரால் நிறுவப்பட்ட அகில இந்தியப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (AISCF) உடன் அவர் பணியாற்றியது.
  • அவர் AISCF-இல் இணைந்த முதல் தலித் பெண்மணியும், தென்னிந்தியப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவருமானார்.
  • இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற தேசிய இயக்கங்களுடனான அவரது தொடர்பு, இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களின் குழுவிலும் அவரைக் கொண்டு வந்தது.
  • மெட்ராஸ் மாகாணத்திற்கான நீதிபதியாகவும், திரைப்படத் தணிக்கை வாரியம் மற்றும் சென்னை மாநில ஆலோசனைக் குழு போன்ற பல முக்கியமான வாரியங்கள் மற்றும் குழுக்களில் அவர் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • மீனாம்பாள் சிவராஜ் என்ற தனது இயற்பெயர் "ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தது" என்று அவர் நம்பிய மீனாம்பாள் சிவராஜ் என்று இனி அப்பெயர் கொண்டு அழைக்கப்படுவதை விரும்பவில்லை.
  • மாறாக, அவர் அங்கயற்கண்ணி சிவ அரசு என்று அழைக்கப்படுவதைத் தேர்ந்தெடுத்தார்.
  • 1933 ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள YMCA-வில், மீனாம்பாள் சிவராஜ் தீண்டாமை, வேலையின்மை மற்றும் இந்தியாவின் "பிற்படுத்தப் பட்டச் சமூகங்களின்" எதிர்காலம் பற்றிப் பேசத் தொடங்கினார்.
  • டாக்டர் அம்பேத்கருடன் நெருக்கமாகப் பணியாற்றிய தலித்துகளின் தேசிய மகளிர் மாநாட்டில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
  • அவர் 1946 ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் செனட் உறுப்பினர்களால் சென்னை நகரச் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சில தகவல்கள் அவர் நகர சபையின் ஒரு பகுதியாக இருக்கும் முதல் பட்டியல் சாதியினப்  பெண் என்றும் கூறுகின்றன.
  • 1952 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் அவர் தேர்தல்களில் போட்டியிட்டார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார்.
  • மீனாம்பாள் நவம்பர் 30, 1992 அன்று தனது 88 வயதில் இறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்