மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களின் உரிமைகள் பிரகடனம்
April 28 , 2024 382 days 510 0
2010 ஆம் ஆண்டில், செட்டாசியன் உரிமைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற மாநாட்டில் மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களின் உரிமைகளுக்கான பிரகடனம் ஆனது சமார்பிக்கப்பட்டது.
இந்தப் பிரகடனம் ஆனது மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களுக்குக் குறிப்பாக ஓங்கில்கள் மற்றும் திமிங்கலங்கள், ஆகியவற்றிற்கு வாழ்வதற்கான உரிமை மற்றும் சட்டப்பூர்வ ஆளுமை ஆகியவற்றை வழங்குகிறது.
தற்போது, ஒரு புதிய ஒப்பந்தத்தில் திமிங்கலங்கள் மற்றும் ஓங்கில்கள் அதிகாரப் பூர்வமாக "சட்டப்பூர்வ நபர்கள்" என அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் குக் தீவுகள், பிரெஞ்சு பாலினேசியா, அயோடேரோவா (நியூசிலாந்து) மற்றும் டோங்கா ஆகிய சில நாடுகளைச் சேர்ந்த பசிபிக் தன்னாட்டு அமைப்பின் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.