மீன்பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு காப்பீடு பற்றிய உலக மதிப்பாய்வு 2022
May 1 , 2022 1192 days 458 0
உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆனது 'மீன்பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்புக் காப்பீடு' பற்றிய 2022 ஆம் ஆண்டிற்கான உலக மதிப்பாய்வை வெளியிட்டுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளின் தகவல்களை முன்வைக்கிறது.
இந்திய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் காப்பீட்டு வசதிகளின் வழங்கீடு குறைவாக உள்ளது.
எனவே, இந்தத் துறையை மீட்டெடுப்பதற்காக வேண்டி பொது மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைந்துச் செயல்படுமாறு இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டது.
இந்தியாவின் இந்த தேசிய அளவிலான அறிக்கையை மூத்த அறிவியலாளர் ஷினோஜ் பரப்புரத்து என்பவர் தயாரித்துள்ளார்.
மீன்பிடிக் கப்பல்கள், கடலோர அசையாச் சொத்துக்கள் மற்றும் மீன்வளர்ப்பு அலகுகள் ஆகியவற்றிற்குச் சரியான காப்பீட்டு வசதிகள் வழங்கப்படவில்லை.