மீன்வள மானியங்கள் மீதான WTO (உலக வர்த்தக அமைப்பு) ஒப்பந்தம் என்பது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட முதல் WTO ஒப்பந்தமாகும் என்பதோடு இது தீங்கு விளைவிக்கும் மீன்பிடி மானியங்களை இலக்காகக் கொண்டு உள்ளது.
பிரேசில், கென்யா, வியட்நாம் மற்றும் டோங்கா உள்ளிட்ட WTO உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த ஒப்பந்தத்தினை அங்கீகரித்ததையடுத்து இது நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தமானது சட்ட விரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப் படாத (IUU) மீன்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் அல்லது ஒழுங்கு படுத்தப் படாத ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கான மானியங்களை தடை செய்கிறது.
இது அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுப்பது, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் மீன்வளத்தை நம்பியுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய மீன்வளங்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுள் தற்போது அதிகப் படியான மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதால் கடல் வளப் பாதுகாப்பிற்கு இந்த ஒப்பந்தத்தை இது முக்கியமானதாக ஆக்குகிறது.
இந்த ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற WTO அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை முழுமையாக செயல்படுத்த 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடைபெற உள்ள 14வது அமைச்சர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க WTO உறுப்பினர் நாடுகளுக்கு வலியுறுத்தப்படுகின்றது.